'மௌனகுரு' படம் என்னை கவனிக்க வைத்திருக்கிறது என்று அருள்நிதி கூறினார். சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி, இனியா நடித்த படம், 'மௌனகுரு'. சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுபற்றி அருள்நிதி கூறியதாவது: இந்தப் படம் ரசிகர்கள் மட்டுமன்றி விமர்சகர்களாலும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. பல இயக்குனர்கள் படம் பார்த்துவிட்டு பாராட்டினார்கள். மகிழ்ச்சியாக இருந்தது. சினிமாவில் நான் கவனிக்கப்பட்டிருக்கிறேன் என நினைக்கிறேன். இப்போது பல இடங்களில் தியேட்டர்களின் எண்ணிக்கையை அதிகரித்திருக்கிறார்கள். கூடுதலாக முப்பதுக்கும் அதிகமான பிரின்டுகள் அனுப்பப்பட்டுள்ளன. காட்சியின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்தி இருக்கிறார்கள். இதையடுத்து பலர் கதை கேட்க, என்னை அழைத்திருக்கிறார்கள். ரசிகர்களின், சினிமா ரசனை மாறியிருக்கிறது. அதற்கேற்ப கதைகளை கேட்டு வருகிறேன். இன்னும் எதையும் முடிவு செய்யவில்லை. 'மௌனகுரு'வை விட சிறந்த கதையாகத் தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். இவ்வாறு அருள்நிதி கூறினார்.
Post a Comment