வரும் வெள்ளிக்கிழமை ஒன்பது படங்கள் ரிலீஸ் ஆகின்றன. 'பெரிய ஹீரோ நடித்த மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே தியேட்டர் கிடைக்கிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது' என்று சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பெரிய ஹீரோக்கள் நடிக்கும் படங்களை வருடத்தில் 5 நாட்கள் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருந்தது. இது பின்னர் 8 நாட்கள் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சின்ன பட்ஜெட் படங்களை தியேட்டர் கிடைத்தால் எப்போது வேண்டுமானாலும் ரிலீஸ் செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த மாதம் 21 சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் என்று தெரிகிறது. வரும் வெள்ளிக்கிழமை மட்டும், 'தோனி', 'ஒரு நடிகையின் வாக்குமூலம்', 'விளையாட வா', 'ஒரு மழை நான்கு சாரல்', 'சூழ்நிலை', 'ருத்ரபூமி', 'வாச்சாத்தி', 'எங்கடா உங்க மந்திரி' ஆகிய படங்களும், 'உச்சிதனை முகர்ந்தால்' படம் ரீ ரிலீஸும் ஆகின்றன.
Post a Comment