பிரதமர் அளித்த விருந்தில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்பு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
தனுஷை தொடர்ந்து, நடிகை ஸ்ருதி ஹாசனும் பிரதமர் அளித்த விருந்தில் பங்கேற்றார். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷ் பாடியிருக்கும் 'ஒய் திஸ் கொல வெறிடி' பாடல் உலகம் முழுக்க பெறும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்பாடல் சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அளித்த விருந்தில் பங்கேற்க தனுஷுக்கு அழைப்பு வந்தது. அவர் பங்கேற்றார். இதையடுத்து, '3' பட ஹீரோயின் ஸ்ருதி ஹாசனுக்கும் பிரதமர் அளிக்கும் விருந்தில் பங்கேற்க அழைப்பு வந்தது. பிரதமர் அளித்த விருந்தில் அவரும் கலந்துகொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: டெல்லியில் உள்ள ஐதராபாத் ஹவுஸில் மொரீஷியஸ் பிரதமருக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். அதில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்தது. பங்கேற்றேன். இது என் வாழ்வில் மறக்க முடியாத தருணம். இதில் பங்கேற்றதை பரவசமாகவும், கவுரவமாகவும் கருதுகிறேன். விருந்தின்போது, பிரதமரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தனர். அவருடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பாலிவுட் ஹீரோ இம்ரான் கானும் கலந்துகொண்டார். இருவரும் 'லக்' என்ற படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறோம். இவ்வாறு ஸ்ருதி ஹாசன் கூறினார்.


 

Post a Comment