சூப்பர் டீம் சினிமாஸ் தயாரித்துள்ள படம், 'நந்தா நந்திதா'. ஹேமச்சந்திரன், மேக்னா ராஜ் நடித்துள்ளார்கள். ராம் ஷிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் ராம் ஷிவா கூறியதாவது: கன்னடத்தில் ஹிட்டான 'நந்தா நந்திதா' படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்திருக்கிறோம். வன்முறையை கையில் எடுத்தால் அவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் எப்படி பாதிக்கப்படுகிறது என்பது கதை. நகர்ப்புற குடிசை பகுதியில் நடக்கும் கதை என்பதால் அங்கு பயன்படுத்தப்படும் வார்த்தைகள் படத்தில் இருந்தது. இதனால் வன்முறை படம் என்று சொல்லி, சென்சார், 'ஏ' சான்றிதழ்தான் தருவோம் என்றார்கள். இதே கதை கன்னடத்தில் வெளிவந்துள்ளது என்று வாதிட்ட பிறகு, 'யு/ஏ' சான்றிதழ் கொடுத்தார்கள். இதனால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த மாதம் வெளியிட இருக்கிறோம்.
Post a Comment