கோச்சடையான் 2 வது கட்ட படப்பிடிப்பு: கேரளாவில் சூப்பர் ஸ்டார்!

|


Kochadayan Movie
ரஜினி குடும்பத்தில் குழப்பம், கோச்சடையானுக்கு பிரச்சினை, மகள்களுக்குள் சண்டை என்றெல்லாம் செய்திகள் வந்த நிலையில், அவையனைத்துமே வதந்திகள் என்பதை நிரூபிக்கும் வகையில், கூலாக அடுத்த கட்டப் படப்பிடிப்பை தொடங்கிவிட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

கோச்சடையானின் இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் இன்று முதல் கேரளாவில் படப்பிடிப்பு நடக்கிறது. இதனை சௌந்தர்யா நேற்று அறிவித்துவிட்டார். லண்டன் படப்பிடிப்பில் பங்கேற்க முடியாத ஆதி, தீபிகா படுகோன் ஆகியோர் தொடர்புடைய காட்சிகள் இங்கே படமாக்கப்பட உள்ளன.

கேரள ஷெட்யூலில் முதல்கட்டமாக திருவனந்தபுரம் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு நடத்தும் சௌந்தர்யா, அடுத்து கோட்டயம், ஆலப்புழா மற்றும் கொச்சியில் மீதிக் காட்சிகளை எடுக்கிறார்.

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் மேற்பார்வையில் இந்தக் காட்சிகளை சௌந்தர்யா படமாக்குகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிக்கு டான்ஸ் மாஸ்டர்களாக புதிய டீம் அமைந்துள்ளது.

பாலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான், சின்னி பிரகாஷ் மற்றும் ஷோபி ஆகியோர் ரஜினிக்கு நடனக்காட்சிகளை அமைக்கின்றனர். இவர்களுடன் ஒரு பாடலுக்கு ராஜூ சுந்தரமும் இணைகிறார்.

கோச்சடையான் இந்தியாவின் முதல் முப்பரிமாண இயக்கு நிலை படமாக்கல் (3D Motion capturing technology) தொழில்நுட்பத்தில் எடுக்கப்படுகிறது. எனவே வழக்கமான முறையிலான ஷூட்டிங் குறைவுதான். எனவே இப்போதே படத்தின் பெரும்பாலான talky பகுதிகளை எடுத்து முடித்துள்ளனர்.

மேலும், எந்தப் படத்துக்கும் இல்லாத வகையில் படுவேகத்துடன் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பாடல்களை முடித்துக் கொடுத்துவிட்டார். இதுவரை 5 பாடல்களை முடித்துவிட்ட ரஹ்மான், ஒரு தீம் மியூசிக்கும் உருவாக்கியுள்ளார்.
 

Post a Comment