மேலும் ஒரு ஆண்டு தள்ளிப்போன ஜிவி பிரகாஷ் - சைந்தவி திருமணம்!

|


Saindavi and GV Prakash Kumar
பிரபல இசையமைப்பாளரும், ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகனுமான ஜிவி பிரகாஷ் குமார் - பாடகி சைந்தவி திருமணம் மேலும் ஒரு ஆண்டு தள்ளிப் போனது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குசேலன், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், தெய்வத்திருமகள் தற்போது முப்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற பல படங்களுக்கு இசை அமைத்திருப்பவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவருக்கும் பாடகி சைந்தவிக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர்ந்தது.

இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

இவர்களின் காதல் மற்றும் திருமணம் குறித்து கடந்த ஆண்டே அறிவிக்கப்பட்டது. எப்படியும் 2012 ஜனவரியில் திருமணம் செய்து கொள்வோம் என ஜிவி பிரகாஷ் குமார் கூறியிருந்தார்.

ஆனால் பல படங்களில் இருவருமே பிசியாக இருப்பதால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளதாக பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார்.
 

Post a Comment