கண்டதும் காணாததும் என்ன கதை?

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
எஸ்.பி பிலிம்ஸ் மற்றும் பெரியம்மாள் கலைக்கூடம் சார்பில் எஸ்.சங்கரநாராயணன், எஸ்.இந்து, எஸ்.சத்தியமூர்த்தி, எஸ்.மணிமாறன் தயாரிக்கும் படம், 'கண்டதும் காணாததும்'. விகாஷ், சுவாசிகா, ஆர்.சுந்தர்ராஜன், சூரி உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, வின்ஷி பாஸ்கி. இசை, வி.ஏ.சார்லி. பாடல்கள்: நந்தலாலா, தமிழமுதன், வசீகரன். படத்தை இயக்கும் சீலன் நிருபர்களிடம் கூறியதாவது: கல்லூரியில் படிக்கும் விகாஷ், சுவாசிகா நட்புடன் பழகுகின்றனர். ஒரு சம்பவத்தால் இருவரும் பிரிய நேரிடுகிறது. அவர்களைப் பிரித்த சம்பவம் எது? அதற்கு காரணமானவர்கள் யார் என்பது கதை. கல்லூரி பின்னணியில் நடக்கும் கதை. புதுமையான கோணத்தில் படமாக்கியுள்ளேன்.  ஷூட்டிங் முடிந்துவிட்டது. மே மாதம் ரிலீசாகிறது.


 

Post a Comment