கிரேக்க மொழியில் நடிக்க தேர்வாகி இருக்கிறார் நீது சந்திரா. ஹாலிவுட் படங்களில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன், சோனம் கபூரையடுத்து தமிழ் நடிகை நீது சந்திரா கிரேக்க மொழி படத்தில் நடிக்க தேர்வாகி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது: கோவாவில் 'ஆதிபகவான்Õ தமிழ் பட ஷூட்டிங்கில் இருந்தபோது 'டோபாரிடிஸ்Õ என்ற கிரேக்க மொழி படத்தில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு வந்தது. ஒப்புக்கொண்டேன். இதேபடம் 'ஹோம் சுவீட் ஹோம்Õ என்ற பெயரில் ஆங்கிலத்திலும் வெளியாக உள்ளது. Ôஆதிபகவான்Õ எனக்கு லக்கான படமாக அமைந்திருக்கிறது. இதில் நடித்துக்கொண்டிருக்கும்போதுதான் போஜ்புரி மொழியில் சொந்த படம் தயாரித்தேன். வேறு படங்களில் நடிக்கும் வாய்ப்புகளும் இந்த நேரத்தில்தான் வந்தது. கிரேக்க படத்தில் இந்திய பெண்ணாக நடிக்கிறேன். 3 பேர் என்னை கொல்வதற்காக துரத்துவார்கள். இப்படத்தை தயாரிக்கும் கிரியகோஸ், விருதுபெற்ற பல படங்களை கிரேக்க மொழியில் தயாரித்திருக்கிறார். 'தி லாஸ்ட் ஹோம் கம்மிங்Õ என்ற படமும் இதில் அடங்கும். இந்த படத்துக்காக 4 வருடம் செலவிட்டிருக்கிறார். வரும் மே மாதம் முதல்வாரம் சைபிரஸில் இதன் முதல்கட்ட ஷூட்டிங் நடக்க உள்ளது. தொடர்ந்து 1 மாதம் ஷூட்டிங் நடக்கும். 'தீராத விளையாட்டு பிள்ளைÕ படத்தில் நடித்தபோது எப்படி தமிழ் பேச கற்றுக்கொண்டேனோ அதுபோல் கிரேக்க மொழியில் நடிப்பதற்கு முன் கிரேக்க மொழியின் அடிப்படை வார்த்தைகளை கற்றேன். இவ்வாற நீது சந்திரா கூறினார்.
Post a Comment