கடந்த ஆண்டு ஒரு தமிழ்ப் படத்துக்குக் கூட இசையமைக்க ஒப்புக் கொள்ளாததாலோ என்னமோ, இந்த ஆண்டு ஆறு புதிய படங்களுக்கு இசையமைக்க ஒப்புக் கொண்டுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்!
இதில் முதலில் வரவிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான்தான் (படம் முதலில் வராவிட்டாலும் பாட்டு வந்துவிடும் எனத் தெரிகிறது!). செப்டம்பர் அல்லது தீபாவளிக்கு இந்தப் படம் வருகிறது.
இன்னொரு முக்கியமான படம் மணிரத்னம் இயக்கும் கடல். ரொம்ப விசேஷமாக, படப்பிடிப்பு நடக்கும் கடல்புரத்துக்கே போய் பாடல்களை உருவாக்கியுள்ளார் இசைப் புயல்.
இவை தவிர, விஜய் நடிக்கும் யோஹன், தனுஷ் நடிக்கும் மரியான், கோச்சடையானுக்குப் பின் ரஜினி தொடங்கவிருக்கும் புதிய படம் என ஆறு படங்கள். கவுதம் மேனனின் சீரியல் ஒன்றிற்கும் இசை தர அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், “நான் தமிழில் கடந்த ஆண்டு பணியாற்றாமல் இருந்ததற்கு எந்த காரணமும் இல்லை. சூழ்நிலை அப்படி அமைந்துவிட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் இந்த ஆண்டு பாடல்கள் தந்துவிடுவேன்,” என்கிறார் தனக்கே உரிய புன்னகையுடன் ரஹ்மான்!