கலைஞர் டிவியில் ராஜேஷ்குமாரின் ‘மூன்றாவது கண்’

|

Rajeshkumar S Moonravathu Kann Thriller Serial
அழுகை, வஞ்சகம், கள்ளக்காதல், குடும்பத்தைக் கருவறுககும் மோதல் என கேவலமான சீரியல்களை பார்த்து நொந்து போயிருக்கும் நேயர்களை உற்சாகப்படுத்த கலைஞர் தொலைக்காட்சியில் புதிய மர்மத்தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடர் முழுவதும் க்ரைம் கதை மன்னன் ராஜேஷ்குமாரின் கதைகள் இடம் பெற்றுள்ளன என்பது கூடுதல் சிறப்பம்சம்.

பிரபல எழுத்தாளர்கள் சின்னத்திரைக்கும், சினிமாவிற்கும் வருவது புதிய விசயமில்லை. ஏற்கனவே, சுபா, தேவிபாலா போன்றவர்களின் கதைகள் சின்னத்திரை, சினிமா என இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கின்றன. தற்போது க்ரைம் கதை மன்னர் என்று வாசகர்களால் அழைக்கப்படும் ராஜேஷ்குமாரின் கதைகள் கலைஞர் தொலைக்காட்சியில் மர்மத் தொடராக ஒளிபரப்பாக உள்ளன.

“மூன்றாவது கண்” என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரை திரைப்படம் போல கலைஞர் தொலைக்காட்சிக்காக உருவாக்கியுள்ளனர் கிரீன் சில்லீஸ் தயாரிப்பு நிறுவனத்தினர். இந்த நிறுவனத்தின் தலைமை படைப்பாளர் பொறுப்பினை வெங்கட் ஏற்றுள்ளார். இந்த தொடரை பாரதிராஜாவிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த சி.எஸ் பிரேம்நாத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ‘உயர்திரு 420’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதற்கான திரைக்கதை வசனத்தை ஜி. ராதாகிருஷ்ணன் எழுதியுள்ளார். கார்த்திக்கேய மூர்த்தி இசையமைக்க பாடல்களை விவேகா, ஷேசசாமி ஆகியோர் எழுதியுள்ளனர்.

இதன் முதல் மர்மக்கதை “கோகிலா கொலை வழக்கு” இந்த திரில்லர் தொடரில் தேவ் ஆனந்த், நீலிமா கராத்தே கார்த்திக், பஞ்சட்டி, ராம்கி, சுருளி மனோகர், மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ஆகியோர் நடித்துள்ளனர். வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் இந்த தொடர் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Close
 
 

Post a Comment