துபாயில் நடைபெறவிருக்கும் சிமா விருது வழங்கும் விழாவில் ஆட நடிகை ஒருவர் ரூ. 25 லட்சம் வாங்குகிறாராம்.
சிசிஎல் வெற்றியை கொண்டாடும் விதமாகவும், சிமா (South Indian International Movie Awards) விருது வழங்கும் விழாவும் துபாயில் ஜூன் 21 மற்றும் 22 ம் தேதி இரண்டு நாள் நடைபெற உள்ளன.
இதில் சிமா விருது வழங்கும் விழா வரும் 21 ம் தேதி நடைபெறுகிறது. அதில் தென்னிந்திய நடிகர், நடிகையர்கள் பலரும் பங்கேற்கின்றனர். இதில் அமலாபால், ஸ்ருதிஹாசன், சமீரா ரெட்டி, ஹன்சிகா போன்ற நடிகைகள் பங்கேற்க உள்ளனர். 5,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் வசூலாகும் தொகையின் ஒரு பகுதியை 100 குழந்தைகளின் படிப்பு செலவிற்கு ஸ்காலர்ஷிப் தர உள்ளனராம்.
துபாய் விருது விழாவில் நடனமாட ஒரு நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளம் பேசியிருக்கின்றனராம். அம்மணிக்கு இப்போது படங்களை விட கலைநிகழ்ச்சிகள்தான் கை கொடுக்கின்றன என்கின்றன சினிமா வட்டாரங்கள். சி.சி.எல் அவார்டு நிகழ்ச்சிகளில் நடனமாடும் நடிகைகளிலேயே அந்த நடிகைக்குதான் அதிக சம்பளம் என்பதால் புகைச்சலில் இருக்கின்றனர் பிற நடிகைகள்.
ஓடுற குதிரை வாலில்தானே பணத்தை கட்டுவாங்க என்பது சினிமாக்காரங்களுக்கு தெரியாதா என்ன?
Post a Comment