ஹீரோவும் நானே.. வில்லனும் நானே - 'விஸ்வரூபம்' வெள்ளோட்டத்தில் கமல்!

|

Kamal Launches Vishwaroopam First Trailer
பெரும் பொருட்செலவில் கமல்ஹாஸன் எடுத்துள்ள விஸ்வரூபம் படத்தின் முதல் வெள்ளோட்டம் இன்று சிங்கப்பூரில் வெளியானது.

ஒன்றரை நிமிடம் ஓடும் இந்த ட்ரைலரில், படத்தின் பிரமாண்டமும், செய்நேர்த்தியும் ரசிகர்களைக் கவர்வதாக உள்ளன.

தீவிரவாதம், அதற்கு எதிரான போராட்டம்தான் படத்தின் மையக்கரு என்பது இந்த ட்ரைலரில் தெரிகிறது.

அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இதுவரை பார்த்திராத இடங்களில் காட்சிகளை எடுத்திருக்கிறார்கள்.

கமலின் பரதநாட்டியமும் இதில் இடம்பெற்றுள்ளது. அந்த பரத நாட்டிய தாளக்கட்டுக்கு ஏற்ப பின்னர் துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தத்தை வைத்திருப்பது சுவாரஸ்யம்.

சிங்கப்பூரில் நடக்கும் ஐஃபா விழாவில் கமல் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இந்த ட்ரைலரை இன்று வெளியிட்டார். படத்தின் சில காட்சிகளையும் அங்கே திரையிட்டுக் காட்டினார்.

ட்ரைலரின் முடிவில் கமல் சொல்கிறார்: 'ஹீரோவும் நானே... வில்லனும் நானே..' (படம் வந்தா தெரிஞ்சிடுமே!!)

அவர் பேசுகையில், "13வது ஐஃபா விழாவில், பிராந்திய மொழி படங்களுக்கும் உரிய முக்கியத்துவம் தர முடிவெடுத்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது. ஷபனா ஆஸ்மி, லிவ் உல்மான் போன்றோர் உள்ள இந்த மேடையில் நானும் இருப்பதை பெருமையாகக் கருதுகிறேன்," என்றார்.

 

Post a Comment