சித்தியிடம் சினிமா கற்ற 'செம்பட்டை' கவுரி நம்பியார்!

|

Actress Karthika S Sister Gowri Debuts In Sembattai

தமிழ் பட உலகிற்கு மலையாள தேசத்தில் இருந்து கவுரி நம்பியார் என்ற புதுநடிகை அறிமுகமாகியுள்ளார். செம்பட்டை படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள கவுரி நம்பியார் வேறு யாருமல்ல ‘கோ' பட நாயகி நடிகை கார்த்திகாவின் பெரியப்பா மகள் என்கின்றன சினிமா வட்டாரங்கள்.

கோலிவுட்டிற்கு புதுவரவான நடிகை கவுரியிடம் பேசியதில் "சினிமாவில் எனக்கு சீனியர் கார்த்திகா என்பதால், அவரிடமும், எனது சித்தியான, "அலைகள் ஓய்வதில்லை ராதாவிடமும் சினிமாவை கேட்டு தெரிந்து கொண்டே நடிக்க வந்துள்ளேன் என்கிறார் கவுரி.

"இந்த, "செம்பட்டை படத்தில் உப்பு விற்கும் பெண்ணாக நடித்திருக்கிறேன். அண்ணன், தம்பி பாசத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தில், காதல், சென்டிமென்ட் இரண்டும் கலந்த கதாபாத்திரம் என்பதால், கதையோடு கலந்து நடித்துள்ளேன். அதனால், இந்த படம் திரைக்கு வரும் போது, எனது நடிப்பு பேசப்படும் என்றார்.

"எனது சித்தி ராதா சொன்னது போல், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை மதித்து நல்ல நடிகை என்ற பெயருடன் சினிமாவில் நீடித்திருப்பேன் என்று சித்தி புராணம் பாடுகிறார் கவுரி நம்பியார். இந்த படத்தின் ஹீரோ திலீபன், விமல், விதார்த் ஆகியோருடன் இணைந்து கூத்துப்பட்டறையில், எட்டு ஆண்டுகளாக பயிற்சி பெற்றவராம். செம்பட்டை இயக்குநர் ஐ.கணேஷ், பாசில், சித்திக் போன்ற இயக்குனர்களிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றியவராம்.

 

Post a Comment