அஜீத் கூட நடிச்சது என் அதிர்ஷ்டம்: பார்வதி ஓமனகுட்டன்

|

Parvathy Omanakuttan Praises Ajith

அஜீத் குமாருடன் பில்லா 2 படத்தில் நடித்தது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று புதுமுக நடிகை பார்வதி ஓமனகுட்டன் தெரிவித்துள்ளார்.

பில்லா 2 படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு வரும் மலையாளத்து பெண்குட்டி பார்வதி ஓமனகுட்டன். அவர் கோவையில் உள்ள தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் முதன் முதலாக நடித்துள்ள தமிழ் படமான பில்லா 2 சிறப்பாக வந்துள்ளது. படம் வெயாகும்போது எனது கதாபாத்திரம் பேசப்படும். எனக்கும் கோலிவுட்டில் உரிய அங்கீகாரம் கிடைக்கும். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. நடிகர் அஜீத் குமாருடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம். அவர் ஒரு ஜென்டில்மேன்.

பெரிய நடிகராக இருந்தாலும் தோரணையே இல்லாமல் படப்பிடிப்பில் உள்ள அனைவரிடமும் கலகலப்பாகப் பேசி பழகினார். ஷூட்டிங்கின்போது மிகவும் எளி
மையாக இருந்தார். அவருடைய நடவடிக்கைகள் வியக்கும் வண்ணம் இருந்தது என்றார்.

அஜீத் குமாரிடம் என்ன மாய, மந்திரம் இருக்கிறதோ. அவருடன் பணிபுரிபவர்கள் அனைவரும் அவரின் புகழ்பாடுகின்றனர். தற்போது அந்த லிஸ்ட்டில் பார்வதியும் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment