சகுனியில் நான் ரஜினி.. சந்தானம் கமல்! - கார்த்தி

|

Karthi Is Rajini Saguni
சகுனி படத்தின் இசைவெளியீட்டுக்குத் தேதி குறித்து அழைப்பிதழும் வைத்துவிட்டார்கள்.

சிறுத்தைக்குப் பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு வரும் இந்தப் படத்தில் கார்த்தி ரஜினியாகவும், சந்தானம் கமலாகவும் வருகிறார்களாம்.

இதுகுறித்து ஹீரோ கார்த்தி கூறுகையில், "சகுனி எனக்கு ரொம்ப பிடிச்ச படமாக வந்திருக்கு. ஒரு பொதுவான பிரச்சினையை என் புத்திசாலித்தனத்தால தீர்த்து, கூடவே தன்னையும் காப்பாத்திக்கிற கேரக்டர். இது அரசியல் படமா என்பதை பார்த்துவிட்டு நீங்கள்தான் சொல்லணும். காரணம், எதுலதான் அரசியல் இல்லாம இருக்கு... அப்படி பார்த்தா இது அரசியல் படம்தான்...

இந்தப் படத்தில் சந்தானம் என்னை ரஜினி என்று அழைப்பார், நான் அவரை கமல் என்று அழைப்பேன்," என்றார்.

ஜூன் 2-ம் தேதி படத்தின் இசை வெளியாகிறது. மொத்தம் 5 பாடல்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏற்கெனவே கார்த்தி பிறந்த நாளான மே 25-ல் இரண்டு பாடல்களின் முன்னோட்டத்தை வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
 

Post a Comment