சல்மான் கான் நடிக்கும் ஏக் தா டைகர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் கத்ரீனா கைப் அந்த படத்திற்காக பெல்லி டான்ஸ் கற்றுள்ளார்.
பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் தனது முன்னாள் காதலர் சல்மான் கானுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ஏக் தா டைகர். இந்த படப்பிடிப்பில் சல்மானும், கத்ரீனாவும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டதாகப் பேசப்படுகிறது. மேலும் படப்பிடிப்பின்போது கத்ரீனா கைப் அரைகுறை ஆடையில் வந்ததைப் பார்த்து கடுப்பான சல்மான் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டார் என்று ஒரே பேச்சாகக் கிடந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் வரும் மாஷா அல்லாஹ் என்ற பாட்டிற்காக கத்ரீனா கைப் பெல்லி டான்ஸ் கற்றுக் கொண்டுள்ளாராம். ஏற்கனவே அவர் குத்தாட்டம் போட்டு ஹிட்டான ஷீலா கி ஜவானி மற்றும் சிக்னி சமேலி போன்று மாஷா அல்லாஹ் பாடலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அதாவது சுதந்திர தினத்தன்று ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ. பற்றி குறிப்பிடப்பட்டிருப்பதால் இப்படத்திற்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டது என்று கூறப்பட்டது. ஆனால் அப்படி தடை எதுவும் விதிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
Post a Comment