கலைஞர் டிவியில் ஞாயிறு தோறும் இரவு 8 மணிக்கு "பாசப்பறைவைகள்" எனும் கேம் ஷோ ஒளிபரப்பாகிறது. சின்னதிரை நட்சத்திரங்கள், பாடகர்கள் என பிரபலமாக இருக்கும் சினிமாத்துறையினர் என பலர் இதில் குடும்பத்துடன் கலந்துகொள்கிறார்கள். இது வேடிக்கையான விளையாட்டு போட்டி. கோவை சரளா தொகுத்து வழங்குவதால் கலகலப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதை நிரூபித்து வருகிறார்.
நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களைக் குறித்து பத்து கேள்விகளை கேட்கிறார். வேடிக்கையான கேள்விகளும் விவகாரமான பதில்களுமாக போகிறது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக விதவிதமான மார்டன் உடைகளை அணிந்து நிகழ்ச்சியை கலகலப்பாக்கிவருவது சிறப்பம்சம்.
முதலில் மார்டன் உடைகளை அணிய வெட்கப்பட்டு கோவை சரளா மறுக்க, டான்ஸ் மாஸ்டர் காலா விடாப்பிடியாக மார்டன் உடைகளை போட்டுவிட்டு சூப்பர் என்று பாராட்டினாராம்.ஆனால் சில சமயங்களில் வயதை மறந்து ஆடைகளை தேர்வு செய்துவிடுகிறார் என்பதுதான் நேயர்களின் கமெண்ட் ஆக உள்ளது.
கலைஞர் டிவி ஆரம்பித்த காலத்திலிருந்து மானாட மயிலாட , குயில் பாட்டு போன்ற பல ரியாலிட்டி ஷோக்களை இயக்கிய கலா மாஸ்டர் தான் இந்த நிகழ்ச்சியையும் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment