கலர்புல் பீச் கேர்ள்ஸ் கல்யாணி - பாவனா!

|

Bhavana Kalyanai Hosting Beech Gi

ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும் 'பீச் கேள்ர்ஸ்' நிகழ்ச்சி சினிமா பிரபலங்களின் பெர்சனல் பக்கங்களை கொஞ்சம் புரட்டிப் பார்க்க வைக்கிறது. ஆனால் கேள்விகளின் கொஞ்சம் குறும்பு அதிகமாக இருக்கிறது என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

திங்கள் முதல் புதன் வரை ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பாகவும் செய்கிறது. பாவனா, கல்யாணி என்ற இரு இளம் பெண் தொகுப்பாளர்கள் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்கள்.

பீச் போன்ற செட் அமைத்து அதில் கலர் ஃபுல் உடையில் இரண்டு தொகுப்பாளினிகள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சிறப்பம்சம். நிகழ்ச்சியில் பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளரின் உடையும் கூட பீச் பகுதியில் அணிவதைப் போல இருக்கும். ஒவ்வொரு வாரமும் சினிமா பிரபலங்கள் யாரையாவது அழைத்து கேள்வி கேட்கிறோம் பதில் சொல்ல வேண்டுமென்று ஆரம்பிப்பார்கள். ரூம் போட்டு யோசிப்பாங்களா என்பதைப்போல அதி புத்திசாலித்தனமான கேள்விகள் கேட்கப்படுகின்றன.

இந்த கேள்வி கேட்பதில் ஒவ்வொரு ரவுண்டும் வித்தியாசப்படும். ஒரு ரவுண்டில் ஆறு பந்துகளை எடுத்து தொகுப்பாளரிடம் கொடுக்க வேண்டும் அதில் எழுதப்பட்டுள்ள கேள்விகளை கேட்பார்கள். , யோசிக்காம பதிலை உடனே சொல்ல வேண்டும்.

மற்றொரு ரவுண்டில் பலூன்களை அம்பு கொண்டு எரிய வேண்டும், பலூனை உடைத்து அதன் உள்ளே பங்கேற்பாளருக்கு தெரிந்த ஒருவர் இருப்பார், அவரை பற்றி இதுவரை மீடியா அறிந்திராத ஒரு விசயத்தை சொல்ல வேண்டும். சிறப்பு அழைப்பாளருடன் விளையாட்டும் வேடிக்கையுமாக போகிறது இந்த நிகழ்ச்சி. ஒவ்வொரு ரவுண்டும் முடிந்ததும் விளம்பரதாரரின் பரிசு பொருள்கள் பங்கேற்கும் பிரபலத்துக்கு வழங்கப்படும்.

 

Post a Comment