பிரியதர்ஷினியின் பெர்சனல் பக்கங்கள்!

|

Tv Anchor Priyadarshini Personal Pages

தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி. குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்திருந்தாலும் இதயக்கோவில், உயிரே உனக்காக ஆகிய திரைப்படங்களில் சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றுள்ளார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் 'விழுதுகள்' நெடுந்தொடரில் சின்னத்திரை கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றிய திவ்யதர்ஷினி இப்போது கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறார். 'புலி வருது' உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

நடனத்தில் ஆர்வம் கொண்ட பிரியதர்ஷினி ‘மானாட மயிலாட' நடன நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்' விருதினைப் பெற்றிருக்கிறார்.

பரதக்கலையை முறையாகப் பயின்ற இவர், அமெரிக்க தமிழ்த் திருவிழா - இல் இடம் பெற்ற "வீரத்தாய் வேலுநாச்சியார்" நாட்டிய நாடகத்தில் முக்கிய வேடத்தில் நாட்டியமாடி அசத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேனல்களில் இன்றைக்கு தர்ஷினி சகோதரிகளின் ஆதிக்கம்தான் ( பிரியதர்ஷினி - திவ்யதர்ஷினி). அக்கா பிரியதர்ஷினி கலைஞர் டிவி என்றால் தங்கை திவ்யதர்ஷினி விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக கலக்கி வருகிறார்.

 

Post a Comment