ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீதேவி 14 வருடங்களுக்கு பிறகு ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' என்ற இந்திப் படத்தில் மீண்டும் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இப்படம் நேரடியாகத் தயாராகிறது.
இதில் முக்கிய காட்சி ஒன்றில் முன்னணி நடிகர்கள், கவுரவ தோற்றத்தில் ஸ்ரீதேவியுடன் தோன்றுகின்றனர்.
அந்தக் காட்சியில் இந்தி படத்தில் அமிதாப்பச்சன் நடிக்கிறார்.
தமிழ் பதிப்பில் ஸ்ரீதேவியுடன் நடிக்க அஜீத்திடம் கேட்டனர். ஆரம்பத்தில் அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. எனவே அஜீத்துக்கு பதில் மாதவனிடம் கேட்டனர்.
இந்த நிலையில் இப்போது அஜீத் நடிக்க சம்மதித்துள்ளார். இதையடுத்து ஸ்ரீதேவி, அஜீத் நடிக்கும் காட்சிகளை வருகிற 13-ந்தேதி மும்பையில் உள்ள ஸ்டூடியோவில் படமாக்குகின்றனர். இதற்காக அங்கு செட் போடப்பட்டு உள்ளது.
13-ந்தேதி ஸ்ரீதேவிக்கு பிறந்தநாள் என்பதால், படப்பிடிப்பிலேயே அவரது பிறந்தநாளை கொண்டாடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. அன்றே படத்தின் பாடல்களையும் வெளியிடுகின்றனர்.
‘இங்கிலீஸ் விங்கிலீஸ்' படத்தை இயக்குநர் பால்கியின் மனைவி இயக்குகிறார். தயாரிப்பாளர்களில் ஒருவராக பால்கி பங்கெடுத்துள்ளார். அக்டோபர் 5-ந்தேதி ரிலீசாகிறது.
Post a Comment