மும்பை: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் இரண்டாவது முறையாக அப்பாவாகி உள்ளார். அவரது மனைவி டுவிங்கிள் இன்று காலை அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிகை டுவிங்கிள் கன்னாவை மணந்தார். திருமணத்திற்கு பிறகு டுவிங்கிள் படங்களில் நடிப்பதை நிறுத்தி வைத்துள்ளார். அவர்களுக்கு 10 வயதில் ஆரவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அக்ஷய் குமாரும், டுவிங்கிளும் பிரியப் போகிறார்கள் என்று செய்திகள் வந்தன.
இந்த செய்திகள் பரவ ஆரம்பித்த சில நாட்களில் டுவிங்கிள் இரண்டாவது முறையாக கர்ப்பம் என்ற செய்தி வந்தது. நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று மாலை பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேன்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அக்ஷய் குமார் ஓ மை காட் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜெய்ப்பூர் சென்றிருந்தார். இந்த செய்தி கேட்டவுடன் அவர் மும்பை வந்து சேர்ந்தார்.
இன்று காலை டுவிங்கிள் அழகிய பெண் குழந்தையை பெற்றெடுத்தார். குழந்தை டுவிங்கிளைப் போன்று அழகாக உள்ளதாக அக்ஷய் தெரிவித்துள்ளார்.
Post a Comment