பட அதிபர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகர் கிருஷ்ணமூர்த்தி புகார்

|

Actor Krishnamurthy Complaints About Producer Sridharan

சென்னை: காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி பட அதிபர் எஸ்.ஸ்ரீதரன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

பல்வேறு படங்களில் காமெடி மற்றும் குணசித்திர வேட்ங்களில் நடித்துள்ளவர் கிருஷ்ணமூர்த்தி. அவர் தமிழ், மலையாளம், மற்றும் கன்னடத்தில் தயாராகியுள்ள யாருக்கு தெரியும் என்ற படத்தில் புரொடக்ஷன் மேனஜராக பணியாற்றினாராம். ஆனால் அப்படத்தின் தயாரிப்பாளரான எஸ். ஸ்ரீதரன் தன்னிடம் வேலையை வாங்கிவிட்டு சம்பளம் தராமல் ஏமாற்றிவிட்டதாக கிருஷ்ணமூர்த்தி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

யாருக்கு தெரியும் படத்தில் புரொடக்ஷன் மேனேஜராக பணியாற்றினேன். எனக்கு பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காமல் தயாரிப்பாளர் ஸ்ரீதரன் படத்தை வெளியிடும் வேலையில் மும்முரமாக உள்ளார். அதனால் எனக்கு சேர வேண்டிய சம்பளத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சியில் புகார் கொடுத்துள்ளேன். இது குறித்து சங்க நிர்வாகிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே நான் அவரை ஏமாற்றியதாகவும், பண மோசடி செய்தததாகவும் ஸ்ரீதரன் அவதூறு பரப்பி வருகிறார். திரையுலகில் உள்ளவர்களிடம் நல்ல பெயர் வாங்கியுள்ளேன். நான் யாரையும் ஏமாற்றவில்லை. ஸ்ரீதரனின் அவதூறு புகரால் மன உளைச்சலில் உள்ளேன் என்றார்.

கிருஷ்ணமூர்த்தியின் வழக்கறிஞர் எம்.தாமோதர கிருஷ்ணன் கூறுகையில்,

கிருஷ்ணமூர்த்திக்கு திரையுலகில் உள்ள நன்மதிப்பை கெடுக்கவே அவருக்கு எதிராக அவதூறு பரப்புகிறார்கள். அவர் யாரையும் ஏமாற்றவில்லை. தனக்கு சேர வேண்டிய பணத்தை வாங்கித் தருமாறு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்
கொடுத்துள்ளார் என்றார்.

நடிகர் கிருஷ்ணமூர்த்தியை அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் நன்றாகத் தெரியும். அவரது பெயரைச் சொன்னால் யாருக்கும் தெரியாது. மாறாக அவர் தவசி படத்தில் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காட்சிகளைச் சொன்னால் அத்தனை பேருக்கும் பளிச்சென தெரியம் - பின்லேடன் அட்ரஸையும், முல்லா உமரின் அட்ரஸையும் கேட்டுவடிவேலுவை டார்ச்சர் செய்து நடித்திருப்பார் அப்படத்தில். அதுதான் அவரதுமுகவரியாகவும் அமைந்தது கடைசியில்..

 

Post a Comment