நடிகையானார் சத்யராஜின் மகள் திவ்யா!

|

Sathyaraj S Daughter Debuts As Actress

சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவும் இப்போது நடிகையாகியுள்ளார். ஆனால் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு மரத்தைச் சுற்றிச் சுற்றிப் பாட்டுப் பாடும் நடிகையாக அல்ல, மாறாக, ஒரு டாக்குமென்டரி படத்தில் அவர் நடித்துள்ளார்.

சினிமாவில் அப்பா அல்லது அம்மா அல்லது இருவருமே இருந்தால் அவர்களைப் பின்பற்றி அவர்களது பிள்ளைகளும் நடிக்க வருவது புதிதல்ல. எத்தனையோ பேர் இதுபோல வாரிசு நடிகர்களாகி, நடிகைகளாகி முத்திரை பதித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது லேட்டஸ்டாக திவ்யா சத்யராஜ் இணைகிறார். இவர் நடிகர் சத்யராஜின் மகள் ஆவார். தனது மகன் சிபிராஜை சினிமாவில் சேர்த்து விட்ட சத்யராஜ், மகளை மட்டும் சினிமா வாடை கூட அண்டாமல் கவனமாக இருந்து வந்தார். ஆனால் திவ்யாவுக்கோ சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற கனவு ரொம்ப நாளாக இருந்தது. இருப்பினும் தந்தை விரும்பாததால் அதை மனதில் அடக்கி வைத்துக் கொண்டு வேறு பக்கம் தனது கவனத்தைத் திருப்பினார்.

சமூக சேவையில் அவர் இறங்கினர். சமூக சேவை ஆலோசகராகவும் திகழ்கிறார். என்ஜிஓ அமைப்பு ஒன்றிலும் இணைந்து செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில்தான் அவரத் தேடி நடிப்பு வாய்ப்பு வந்தது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இயக்குநர் சிர்ஷாய் என்பவர் சிறார் தொழில் குறித்த ஒரு டாக்குமென்டரியை உருவாக்கியுள்ளார். அதில்தான் திவ்யா நடித்துள்ளாராம். இந்த வேடத்தில் நடிக்க முதலி்ல கொங்கனா சென்னைத்தான் அணுகினாராம் சிர்ஷாய். ஆனால் அவர் பிசியாக இருக்கவே வேறு நடிகையைத் தேடி வந்தார். அப்போதுதான் தற்செயலாக திவ்யாவை சந்திக்க நேர்ந்துள்ளது. அவரே ஒரு சிறார் தொழிலாளர் நல ஆலோசகராக இருக்கவே டக்கென திவ்யாவையே நடிக்க வைத்து விட்டார்.

திவ்யாவின் நடிப்பைப் பார்த்து அவரது அண்ணன் சிபிராஜ் வெகுவாகப் பாராட்டினாராம்.

இந்த டாக்குமென்டரிப் படத்தை கேன்ஸ் உள்ளிட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடும் திட்டம் உள்ளதாம்.

 

Post a Comment