முதல் படமான ஜிஸ்ம் 2 ஊத்திக் கொண்டாலும் கூட சன்னி லியோன் மீதான கிரேஸ் போகவில்லை நம்மூர் தயாரிப்பாளர்கள் மத்தியில். தற்போது அவர் ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு பேசப்பட்டுள்ளது.
கனடாவில் போர்ன் படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் சன்னி லியோன். ஜிஸ்ம் 2 படத்தில் நடித்து பாலிவுட் திரை உலகில் காலடி வைத்தார்.முதல் படம் ஊத்திக் கொண்டது. இருந்தாலும் சன்னிக்கு சுக்கிர திசைதான் போலிருக்கிறது. அலும்ப்ரா எண்ட்டெர்டெயின்மென்ட் நிறுவனத்தினர் தங்களின் அடுத்த மூன்று படங்களில் நடிக்க சன்னி லியோனை புக் செய்துள்ளனர். இதற்காக 5 கோடி ரூபாய் சம்பளம் தருவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.
இது குறித்து கருத்து கூறியுள்ள நிறுவனத்தின் தலைவர் பராக் சங்கவி, ஜிஸ்ம் 2 விற்கு பிறகு எங்களின் அடுத்தடுத்த படங்களில் சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். 2013ம் ஆண்டு தொடக்கத்தில் முதல் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இதற்கான நடிகர், நடிகையர்கள் தேர்வு நடைபெற உள்ளது என்றார்.
அலும்ப்ரா எண்டெர்டெயின்மென்ட் நிறுவனம் ராகினி எம்.எம்.எஸ், பூட் ரிட்டன்ஸ் போன்ற படங்களை தயாரித்துள்ளது. தற்போது வார்னிங், 26/11 போன்ற படங்களை தயாரித்து வருகின்றனர். இந்த நிறுவனத்தினர் தயாரிக்க உள்ள படங்களில் சன்னி லியோன் ஒப்பந்தமாகியுள்ளதன் மூலம் பாலிவுட் படவுலகில் முக்கியமான இடத்தை தக்கவைத்துக்கொள்வார் என்றே தெரிகிறது.
Post a Comment