‘தலாஷ்', ‘தூம் 3', என பிசி ஷெட்யூல் இருந்தாலும் தனது தாயாருடன் ஹஜ் யாத்திரை சென்றுள்ளார் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான்.
இந்த வருடம் கண்டிப்பாக மெக்காவிற்கு புனிதப் பயணம் அழைத்துச் செல்வதாக தனது தயாருக்கு அமீர்கான் உறுதி அளித்திருந்தாராம். அதனை நிறைவேற்றும் வகையில் கடந்த வெள்ளியன்று மும்பையில் இருந்து தனது உறவினர்களுடன் மெக்காவிற்கு பயணம் கிளம்பிவிட்டார் அமீர்கான்.
இதற்காகவே சிகாகோ நகரில் சூட்டிங்கில் இருந்த அமீர்கான் அவசரமாக மும்பை திரும்பினார். ஹஜ் பயணம் முடிந்து நவம்பர் 3ம் தேதி திரும்பும் அமீர்கான் தன்னுடைய ‘தலாஷ்' படத்திற்கான புரமோசன் வேலைகளில் பிஸியாகிவிடுவார் அமீர்கான். "தலாஷ்' வரும் நவம்பர் 30ம் தேதிக்குத் திரைக்கு வருகின்றது. இந்த படத்தில் அமீர்கான் போலீஸ் வேடம் ஏற்று நடித்திருக்கிறார். க்ரைம் திரில்லர் படம் என்பதால் இது மிகப்பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
தலாஷில் அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்துள்ளார். ராணி முகர்ஜியும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மும்பையில் நடைபெறும் கொலையை துப்பறிந்து கண்டறியும் போலீஸாக அமீர்கான் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Post a Comment