ஆயுதபூஜை, விஜயதசமி விடுமுறை தினங்களில் சேட்டிலைட் சேனல்களில் புதிய திரைப்படங்களை ஒளிபரப்ப முன்னோட்டங்கள் போடப்பட்டு வருகின்றன. ஆனால் மக்கள் தொலைக்காட்சியில் வித்தியாசமாக ஆல்பிரெட் ஹிட்ச்காக்கின் திரைப்படங்களை ஒளிபரப்புகின்றனர்.
மக்கள் தொலைக்காட்சியில் 23-ம் தேதி ஆயுதபூஜையன்று காலை 11.02 மணியளவில் `சைக்கோ' ஒளிபரப்பாகிறது. 1960-ல் இவர் இயக்கிய திரைப்படமே "தி சைக்கோ.'' தற்போது வரும் திரில்லர் படங்களுக்கு முன் மாதிரி திரைப்படமாக இன்று வரை இருந்து வருகிறது இந்தப்படம்.
கொள்ளைக்காரியான படத்தின் நாயகி, ஒரு சமயம் கொள்ளையடித்த பணத்தோடு விடுதியில் தங்குகிறாள், அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக கொலை செய்யப்படுகிறாள். கொலையின் பின்னணியை நோக்கி பயணிக்கும் திரைக் கதை வித்தியாசமானது. த்ரில்லர் படங்களுக்கு முன்னோடியாக திகழும் இந்த திரைப்படத்தை முறியடிக்கும் வகையில் இதுவரை எந்த படமும் வெளியாகவில்லை என்கின்றனர் திரைப்பட ரசிகர்கள்.
மதியம் 2 மணிக்கு ஹிட்ச்காக்கின் வெற்றிப் படங்களில் ஒன்றான `டையல் எம் பார் மர்டர்' ஒளிபரப்பாகிறது. த்ரில் படங்களை விரும்பும் ரசிகர்கள் இதனை கண்டு ரசிக்கலாம்.
Post a Comment