சைப் அலி கானின் சொத்து மதிப்பு ரூ.750 கோடி?

|

Saif Ali Khan S Property Worth Rs 750 Cr

மும்பை: பாலிவுட் நடிகரும் பட்டோடியின் நவாபுமான சைப் அலி கானின் சொத்து மதிப்பு ரூ.750 கோடி என்று கூறப்படுகிறது.

பாலிவுட் நடிகர் சைப் அலி கான் பட்டோடியின் நவாப் ஆவார். அவருக்கு பரம்பரைச் சொத்து எக்கச்சக்கம் உள்ளது. அண்மையில் நடிகை கரீனா கபூரை மணந்த அவர் புதுமனைவியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் சைபின் சொத்து விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவரின் சொத்து மதிப்பு ரூ. 750 கோடி என்று கூறப்படுகிறது.

அவரது தந்தை மன்சூர் அலி கான் பட்டோடி தான் எழுதி வைத்த உயிலில் சொத்தின் பெரும் பகுதியை மகன் சைப் பெயரில் எழுதி வைத்துள்ளதாக முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மீதமுள்ளதை மகள்கள் சபா, சோஹாவுக்கு எழுதி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து அவரிடமே கேட்டதற்கு அவர் கூறுகையில்,

எங்கள் சொத்தின் மதி்ப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. ஆனால் அது பரம்பரைச் சொத்து என்பதால் மதிப்பில்லாதது என்றார்.

 

Post a Comment