சென்னை: தனது 58வது பிறந்த நாளையொட்டி முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் நடிகர் கமல்ஹாஸன்.
நடிகர் கமல்ஹாஸன் நவம்பர் 7-ம் தேதி புதன்கிழமை பிறந்த நாள் கொண்டாடினார். தென் மாநிலங்களில் உள்ள அவரது ரசிகர்கள், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் என பல்வேறு வழிகளில் கமல் பிறந்த நாளைக் கொண்டாடினர்.
தனது பிறந்த நாளன்று அவர் விஸ்வரூபம் படத்தின் Aura 3 D ட்ரைலரை வெளியிட்டார். விழா முடிந்த கையோடு, தலைமைச் செயலகத்துக்கு சென்ற அவர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த சந்திப்பின்போது விஸ்வரூபம் மற்றும் தனது ஹாலிவுட் பட வேலைகள் குறித்து முதல்வருக்கு சிறிது நேரம் விளக்கினார் கமல்.