திருமணம் செய்ய வற்புறுத்தி ரிச்சாவுக்கு நடிகர் மிரட்டல் : கோலிவுட்டில் பரபரப்பு

|

Marriage threat for actress Richa சென்னை: திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தி ரிச்சாவை அவரது காதலரும் நடிகரும் மிரட்டுவதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 'ஒஸ்தி, 'மயக்கம் என்ன படங்களில் நடித்தவர் ரிச்சா. கார்த்தி நடிக்கும் 'பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்கவில்லையென்று சமீபத்தில் வெளியேறினார். இந்நிலையில் தன்னை மணந்துகொள்ளும்படி ரிச்சாவை அவரது பாய்பிரெண்டும் போட்டோகிராபருமான சுந்தர் ராம் மிரட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 'மயக்கம் என்ன படத்தில் ரிச்சா நடித்தார். அதே படத்தில் தனுஷின் நண்பராகவும், ரிச்சாவின் காதலனாகவும் சுந்தர் ராம் நடித்திருந்தார்.

இவர்களுக்குள் மலர்ந்த நட்பு காதலாக மாறியதாக கூறப்படுகிறது. அதன் அடையாளமாக 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை ஒன்றை சுந்தர் ராமுக்கு ரிச்சா பரிசளித்தாராம். சமீபகாலமாக ரிச்சா படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் 'பிரியாணி படத்தில் கேரக்டர் பிடிக்க வில்லை என்று வெளியேறிய ரிச்சா தெலுங்கில் அல்லு அர்ஜுன் படத்திலும் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வேறு இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். திருமணத்துக்கு சம்மதிக்காவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என்று சுந்தர் மிரட்டினாராம்.

மேலும் கைகளில் அறுத்துக்கொண்டு பிளாக் மெயில் செய்ததுடன் அன்பாக ரிச்சா வாங்கிக்கொடுத்த கேமராவையும் அவர் உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் கோலிவுட், டோலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி ரிச்சாவின் மேனேஜர் கல்யாண் கூறும்போது, 'ரிச்சாவின் இமேஜை கெடுக்க சிலர் இதுபோன்ற வதந்தியை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். ரிச்சாவும், சுந்தர் ராமும் சில காலமாக தொடர்பில் இல்லாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது கல்யாணம் செய்துகொள்ள அவர் எப்படி மிரட்டுவார்? அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள். இதுதவிர வேறு எந்த உறவும் இல்லை என்றார். சுந்தர் ராம் கூறும்போது, 'இது எல்லாம் வதந்தி. நாங்கள் இருவரும் எப்போதோ பிரிந்துவிட்டோம் என்றார்.
 

Post a Comment