குழந்தைகளுக்காக மீண்டும் கமலுடன்? - முதல் முறை மனம் திறக்கும் சரிகா

|

Sarika S Open Talk On Rejoining Wit

கமல்ஹாஸனை விட்டுப் பிரிந்த பிறகு முதல் முறையாக அவருடன் சேர்வது பற்றி பேசியுள்ளார் கமலின் இரண்டாவது மனைவியான சரிகா.

சரிகாவும் கமலும் சில ஆண்டுகளுக்கு முன் மவுனமாகப் பிரிந்தார்கள். இதில் இருவருக்கும் பிறந்த மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா கமலுடனே இருந்து கொண்டார்கள்.

சரிகா மும்பையில் செட்டிலாகிவிட்டார். சில படங்களில் மீண்டும் தலை காட்டினார்.

கமலைவிட்டுப் பிரிந்த பிறகு வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சமீபத்தில் அவர் ஒரு பத்திரிகையில் பகிர்ந்து கொண்டார்.

எப்படி இருக்கிறது இப்போதைய வாழ்க்கை?

நன்றாக இருக்கிறது. என் வாழ்வாதாரமும் சிறப்பாகவே இருக்கிறது. கவுரவமாக வாழ்கிறேன். அதுதான் முக்கியம்.

மகள்கள் ஸ்ருதி, அக்ஷராவிடம் சினிமா பற்றி பேசுவீர்களா?

பேசுவேன். சினிமா பற்றிய ஆர்வம் உள்ள அத்தனை பேரிடமும் பேசுவேன். ஸ்ருதிக்கு இசையிலும், அக்ஷராவுக்கு நடனத்திலும் ஆர்வம். இருவருமே அவற்றைக் கற்றவர்கள். சினிமாவில் தங்களுக்கான இடத்தை இருவருமே பெற்றிருக்கிறார்கள். பெற்றோர்களுடன் பிள்ளைகளை ஒப்பிட கூடாது.

இப்போது நாங்கள் பேசி ஒரு முடிவு எடுத்திருக்கிறோம். தக்க இடத்தை பெறும் வரையில் மகள்களை விட்டு தள்ளியே இருப்பதுதான் அது. அவர்கள் என் மகள்கள். அவர்கள் எங்கும் போய்விடப்போவதில்லை, நானும் எங்கும் போய்விடப் போவதில்லை. மீண்டும் அவர்களின் கரத்தை எப்போது வேண்டுமானாலும் பிடித்துக்கொள்வேன். அதனால்தான் என் பேட்டிகளில் அவர்களைப்பற்றி விவாதிப்பதில்லை.

அவர்களின் காதல் விவகாரங்கள் பற்றி...

அதில் நான் தலையிடுவதில்லை. அது அவர்களின் சொந்த வாழ்க்கை.

குழந்தைகளுக்காக கமலுடன் மீண்டும் வாழ்க்கையில் இணைவீர்களா?

அப்படியொரு விஷயம் நடக்க முடியாதபோது அது பற்றி ஏன் பேச வேண்டும்? யாரிடமும் நான் பேச தயாராக இல்லை. வாழ்க்கையை இருவிதங்களில் வாழலாம். எதில் தள்ளப்பட்டோமோ அதில் வாழ்வது ஒரு வகை. தினம் தினம் வாழ்க்கையை ரசித்து சந்தோஷமாக இருப்பது இன்னொரு வகை. நான் இரண்டாவது வகை!

 

Post a Comment