இது பார்த்திபனின் புத்தாண்டு வாழ்த்து!

|

Parthiban S New Year Wish

பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்கு வணக்கம்!

பல காலம் நான் ஏங்கியதுண்டு,
ஒரு column/5cm அளவாவது என் பற்றிய செய்தி பத்திரிக்கைகளில் வந்து விடாதா? என்று!

உலகே மாயமென்கையில்,
உறவுகள் மட்டுமென்ன சாசுவதமா?

அதி வேகமாக சுழழும் திரையுலக பூமி பந்தில் நானும் ஒரு பூஞ்சிறகாய் ஒட்டிக்கொண்டு பயணித்த இத்துனை வருடங்களில் எனக்கு நல் துணையாய் விளங்குவது என் நன்னம்பிக்கை மற்றும் மற்றும்,
நீங்கள் மட்டும்தான்!

இருப்பதை சுவாசம் உணர்த்துவதைப்போல, என் இருப்பை உலகிற்கு உணர்த்தும் சுவாச நேசமாய் நீங்கள்!

'கவர்'ந்திழுத்ததில்லை பெரிதாய் நான் இதுவரை!
கண்ணியமாய் பழகுவேன், ரேகை இடம் பெயர கை குலுக்குவேன், இறுதிவரை நன்றியோடு உயிர் நழுவுவேன்!

வேறென்ன செய்ய?என் புகழ்வின்
வேரென விளங்கும் உங்களை வாழ்த்துவதை மீறி?
புதூ -13, வரும் வருடம் மற்றும் வாழ்நாளெல்லாம்,
ராட்சத ப்ரியங்களுடன்,

-இராதகிருஷ்ணன் பார்த்திபன்
-2013

 

Post a Comment