ராகவா லாரன்ஸ் இயக்கும் முனி படத்தின் மூன்றாம் பாகத்தில் லட்சுமி ராய் நீக்கப்பட்டார். அவருக்குப் பதில் டாப்சி ஹீரோயினாக நடிக்கிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி, ஹீரோவாக நடித்த படம் முனி. இதன் முதல் பாகத்தில் ராகவா லாரன்ஸ் - வேதிகா நடித்திருந்தனர். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடித்தார். படம் சுமாராகப் போனது.
ஆனால் அதன் அடுத்த பாகத்தை காஞ்சனா - முனி 2 என்ற பெயரில் எடுத்தார் லாரன்ஸ். இதில் சரத்குமார் முக்கிய வேடம் ஏற்றார். லட்சுமி ராய் ஜோடியாக நடித்தார். படம் பெரும் வெற்றி பெற்றது.
இப்போது மூன்றாவது பாகத்தை எடுக்கிறார் லாரன்ஸ். இந்தப் படத்தை ராகவா லாரன்ஸே தயாரித்து இயக்குகிறார். படத்துக்கு முனி 2 என்று தற்காலிகமாக பெயர் சூட்டியுள்ள அவர், முதலில் லட்சுமிராயையே நாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால் இப்போது லட்சுமி ராய் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதில் டாப்சியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
டாப்சி கைவசம் இப்போது அஜீத் நடிக்கும் படம் உள்பட நான்கு தமிழ்ப் படங்கள் உள்ளன.
Post a Comment