ஒரு இடைவெளிக்குப் பிறகு தான் இயக்கும் புதிய படத்துக்கு 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்று பெரிட்டுள்ளார் இயக்குநர் கே பாக்யராஜ்.
தமிழ் சினிமாவின் வெள்ளிவிழா இயக்குநர், திரைக்கதை மன்னன் என்று வர்ணிக்கப்படுபவர் கே பாக்யராஜ்.
தொடர்ந்து 9 வெள்ளி விழாப் படங்களைத் தந்தவர். சமீபத்தில் அவர் இயக்கி வந்த படம் சித்து ப்ளஸ டூ. இந்தப் படம் சரியாகப் போகவில்லை.
இந்த நிலையில் புதிய படம் ஒன்றை இயக்கும் பணிகளில் தீவிரமாக உள்ளார் பாக்யராஜ்.
இந்தப் படத்துக்கு துணை முதல்வர் அன்னபோஸ்ட் என்று தலைப்பிட்டுள்ளார். இந்தப் படம் அரசியல் தொடர்புடையதா.. முழு நீள காமெடி படமா.. நடிகர் நடிகைகள் யார் என்பது குறித்து அவர் விவரங்களை வெளியிடவில்லை.
நேற்று மதுரையில் நடந்த அன்னக் கொடியும் கொடிவீரனும் விழாவில் பேசிய பாக்யராஜ் கூறுகையில், "எங்க டைரக்டர் பாரதிராஜாவுக்கு கோபம் அதிகம், அதுவே அவரது பலம் மற்றும் பலவீனம்.
சினிமாவை அவரிடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். என்னை முதல் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவரும் அவரே. என்னை ஹீரோவாக்கியவரும் அவரே. நான் இயக்குநரானதும் அவரால்தான். அவருக்கு என்றென்று நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். தற்போது 'துணை முதல்வர் அன்னபோஸ்ட்' என்ற படத்தை இயக்கி வருகிறேன். விவரங்களை விரைவில் சொல்கிறேன்," என்றார்.
Post a Comment