என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க… 'டிரீம் கேர்ள்' சமந்தா

|

Samantha Get Married 3 Years

தென்னிந்திய ரசிகர்களின் ட்ரீம் கேர்ள் சமந்தா தனது திருமணத்திற்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கிறது என்று கூறியுள்ளார். இப்போதுதான் 25 வயதாகிறது. வரிசையாக படங்கள் புக் ஆகி வருகின்றன. அவற்றை முடித்துவிட்டு எனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

தெலுங்கில் ஈகா... தொடங்கி தொடர் வெற்றிதான் சமந்தாவிற்கு. இன்றைய தேதியில் சமந்தாதான் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

ஆந்திராவில் இப்போது, வெளியான ‘சீதம்மா வகிட்லே ஸ்ரீ மல்லி செட்டு... .படமும் வெற்றிப் படங்களின் பட்டியலில் சேர்ந்து விட்டது. சமீபத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் தெர்டர்ச்சியான வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் என்ற பெருமையைப் பெறுகிறார் சமந்தா.

ஏ மாயே சேசாவே, பிருந்தாவனம், தூக்கடு, ஈகா, வெற்றி வரிசையில் சீதம்மா படமும் சேர்ந்துவிட்டது. இந்தப் படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்திருக்கிறார். இதற்கு முன் மகேஷ் பாபுவுடன் ‘தூக்கடு' என்ற படத்தில் நடித்திருந்தார். அடுத்து, ஜுனியர் என்டிஆர், பவன் கல்யாண் படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் தனது திருமணம் பற்றி மனம் திறந்திருக்கிறார் சமந்தா.

நான் காதலிக்கிறேன்

சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனக்கு ஒரு பாய்ப்ரண்ட் இருப்பதாக தெரிவித்தார். அவர் தனக்கானவர் என்பதை நான் உணர்ந்துள்ளேன். இப்போது எனக்கு 25 வயதாகிறது. இன்னும் மூன்று ஆண்டுகளில் எனது காதலரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சமந்தா.

இந்த வெற்றி நிரந்தரமில்லை. ஆனால் குடும்ப வாழ்க்கைதான் நிரந்தரமானது அதை நான் உணர்ந்துள்ளேன் என்றும் சமந்தா கூறியுள்ளார். தன்னுடைய காதலர் யார் என்பதையோ, அவரின் பெயரையோ சமந்தா வெளியிடவில்லை.

 

Post a Comment