சென்னை : கவர்ச்சியாக நடிப்பது எனக்கு சரிப்பட்டு வராது என்று லட்டு தின்ன ஆசையா புகழ் விசாகா சிங் கூறியுள்ளார்.
‘பிடிச்சிருக்கு' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான விசாகா சிங் நீண்ட நாட்களுக்குப் பின் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஏன் இந்த இடைவெளி என்றால் அவர் இந்திக்கு போய்விட்டு மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறாராம்.
தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' பட வாய்ப்பு வந்தது. ஆடிஷனில் தேர்வான பிறகு நடித்தேன். இந்தப் படம் தமிழக ரசிகர்களிடம் என்னை அதிகளவு கொண்டு சேர்த்திருக்கிறது.
என்னைப் பார்ப்பவர்கள் கவர்ச்சியாக நடிப்பீர்களா என்கிறார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக நடித்திருந்தேன். அது முகம் சுழிப்பது போல் இருக்காது. அது மாதிரியாக நடிப்பேன். அதிக கிளாமராக என்னால் நடிக்க முடியாது. இவ்வாறு விசாகா சிங் கூறினார்.
வெளியிடங்களுக்கு செல்லும்போது என்னை அடையாளம் கண்டு பேசுகிறார்கள். பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தை தொடர்ந்து இன்னும் சில வாய்ப்புகள் வந்திருக்கிறது. அதில் நல்ல கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிப்பேன் என்றார்.
இப்படி சொன்னா தமிழ் ரசிகருங்க ஏத்துக்கணுமே விசாகா.
Post a Comment