நடிகை ரிச்சா கங்கோபாத்யாயா, ஜவுளி வாங்கலையோ ஜவுளி என்று ஆந்திர மாநில ரயில் நிலையங்களிலும், பஸ் ஸ்டாண்டுகளிலும் டிவி பெட்டிகளில் கூவினாலும் கூவலாம்...காரணம், அவர் ஜவுளிக்கடை ஒன்றின் பிராண்ட் அம்பாசடராகி விட்டாராம்.
ஒஸ்தி உள்பட 2 படங்களில்தான் தமிழில் நடித்தார் ரிச்சா. ஆனால் மார்க்கெட் சுத்தமாக கிடைக்கவில்லை. ஆள் நன்றாக இருந்தாலும் கூட வாய்ப்பு ஏனோ வரவில்லை. தெலுங்கில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நடித்துக் கொண்டிருக்கிறார் ரிச்சா. இருந்தாலும் அங்கும் கவலைக்கிடமான நிலைதான்.
சமீபத்தில் இவரது நடிப்பில் மிர்ச்சி என்ற படம் வெளியானது. இதுவாவது கை கொடுக்குமா என்பது தெரியவில்லை. இந்தநிலையில் தற்போது ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு பிரபல ஜவுளிக்கடையின் பிராண்ட் அம்பாசடராகியுள்ளார் ரிச்சா.
இதற்காக அவருக்கு பல லட்சத்தை அந்தநிறுவனம் கொட்டிக்கொடுத்துள்ளதாம். இதையடுத்து அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்கப் போகிறார் ரிச்சா. அவை டிவிகளில் ஒளிபரப்பாகுமாம்.
எப்படியோ பிசியா இருந்தா சரிதான்...
Post a Comment