12 போட்டியாளர்களுடன் '60 நொடி ஆர் யூ ரெடி'

|

Vijay Tv 60 Nodi R U Ready

‘60 நொடி ஆர் யூ ரெடி' விஜய் டிவியில் புத்தம் புதிய கேம் ஷோ தொடங்கியுள்ளது. உடல், மன ரீதியான பலத்தை சோதிக்கும் விளையாட்டு நிகழ்ச்சி இது.

ஹோம் ஸ்வீட் ஹோம் என்ற நிகழ்ச்சி முதலில் விஜய் டிவியில் வாரந்தோறும் ஒளிபரப்பானது. அதில் இரண்டு குழுக்கள் பங்கேற்று விளையாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் 12 நட்சத்திரங்கள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

எடை தூக்குதல், அதற்கு எதிரான சிறிய பந்து ஒன்றை தட்டில் வைத்து விழாமல் ஒரு நொடிக்கு வைத்திருத்தல் என ஆரம்பமே அமர்களமாக தொடங்கியுள்ளது.

ரிந்தியா, பாலாஜி, ஷிவானி, படவா கோபி, போஸ் வெங்கட், ரோபோ சங்கர், ஜார்ஜ், காவ்யா, தேவ், சூசன், ரஜிதா, சமந்தா ஆகிய 12 போட்டியாளர்கள் இதில் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்துகின்றனர்.

சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் இந்த நிகழ்ச்சியை ஈரோடு மகேஷ், பாவனா தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த வாரம் ஆண்கள் மட்டுமல்ல பெண் நட்சத்திரங்களும் எடை தாங்குதல் போட்டியை சிறப்பாக எதிர் கொண்டனர். உடல் ரீதியாகவும் சரி, மனரீதியாகவும் சரி ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என்பதை வெளிப்படுத்தினர்.

ஆனால் தொகுப்பாளர் பாவனாவிடம் ரோபோ ஷங்கர் செய்த ரொமான்ஸ் கொஞ்சம் ஓவராகத்தான் இருந்தது. சூப்பர் சிங்கரில் மாபாக ஆனந்துடன் ஜோடி சேர்ந்துள்ள பாவனா இதில் விஜய் டிவிக்கு புதியமுகமான ஈரோடு மகேஷ் உடன் ஜோடி சேர்ந்து நிகழ்ச்சியை உற்சாகமாக தொகுத்து வழங்குகிறார்.

 

Post a Comment