பாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு தாவப் பார்க்கும் அசினுக்கு கஜினி 2 வாய்ப்பு கிடைக்குமா?

|

Will Asin Return Kollywood With Kajini 2   

சென்னை: கஜினி 2 படம் வரவிருக்கிறது என்று செய்திகள் வெளியாகியுள்ளன. கஜினியில் நாயகியாக நடித்த அசினே இதிலும் நடிப்பாரா என்று தெரியவில்லை.

கஜினி படம் சூர்யா, அசினுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த படம். இன்னும் சொல்லப் போனால் அசினின் திரையுலகில் புதிய சகாப்தத்தை துவங்கி வைத்த படம். கஜினி இந்தி ரீமேக் மூலம் தான் அசின் பாலிவுட் போனார். ஆனால் அவர் அப்படியே அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

பாலிவுட்டில் புதிதாக படங்களில் ஒப்பந்தமாகாத அவர் கோலிவுட் திரும்பும் எண்ணத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கஜினி 2 எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது. கஜினி 2விலும் அசின் தான் நாயகியா என்று தெரியவில்லை. அப்படி ஒரு வேளை அவரை நாயகியாக்கினால் இந்த படம் மூலம் அவர் கோலிவுட்டில் செட்டிலாகிவிடுவாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

அசினுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Post a Comment