ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும்- இது நடிகர் விஜய்யின் 'பிரார்த்தனைக்' கடிதம்

|

Vijay Prays The Betterment Sri Lankan Tamils

சென்னை: படப்பிடிப்புக்காக ஆஸ்திரேலியாவில் இருப்பதால் உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன், என நடிகர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக தென்னிந்திய நடிகர் - நடிகைகள் நேற்று சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

நடிகர் அஜீத், சூர்யா, கார்த்தி ஆகியோர் காலையில் தொடங்கி மாலை வரை உண்ணாவிரதம் இருந்தனர்.

உடல்நிலை காரணமாக, சூப்பர்ஸ்டார் ரஜினி சில மணி நேரம் மட்டுமே உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். மாலையில் வந்த கமல் சில நிமிடங்கள் மட்டுமே இருந்தார்.

நடிகர் விஜய் ஆஸ்திரேலியாவில் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிர போரட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால் போராட்டம் குறித்து சங்கத்தலைவர் சரத்குமாருக்கு அவர் கடிதம் அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்தில் அவர், ‘'தமிழ் உணர்வுள்ள ஒவ்வொரு மனிதனும் ஈழத்தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த உணர்வுகளை பயிர் செய்யும் விதத்தில் கலைஞர்கள் ஒன்று திரண்டு உங்கள் (சரத்குமார்) தலைமையில் உண்ணாவிரதம் நடத்துவதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்ள வேண்டு என்ற உணர்வு இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் படப்பிடிப்பில் இருப்பதால் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதது குறித்து வருத்தமடைகிறேன். ஈழத் தமிழர்களுக்கு விடியல் பிறக்க வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

 

Post a Comment