சினிமாவுக்காக போடப்பட்ட மயான செட்டை நிஜமென்று நினைத்து உண்மையாகவே ஒரு பிணத்தை எடுத்து வந்துவிட்டார்களாம் ஊர்க்காரர்கள்.
தங்கம்மாள் மூவீ மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக கணேசன், தங்கம்மாள் இருவரும் இணைந்து தயாரிக்கும் படமான ஞான கிறுக்கன் ஷூட்டிங்கில்தான் இந்த டம்பவம் நடந்தது.
கதையின் நாயகனாக ஜெகாவும், நாயகிகளாக பிரபல மலையாள நடிகையும் கேரள அரசு விருது பெற்றவருமான அர்ச்சனா கவி, சுஷ்மிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.
முக்கிய கதாபாத்திரத்தில் டேனியல் பாலாஜி, தம்பி ராமையா, செந்தில், செவ்வாளை ராஜு ஆகியோர் நடித்துள்ளார்கள்.
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, தாஜ் நூர் இசையமைத்துள்ளார்.
எழுதி இயக்குபவர் - இளையதேவன்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் உள்ளது. படப்பிடிப்பில் நடந்த சுவையான சம்பவம் இது.
படத்தில் ஒத்த உசிர... கொண்டு வந்தோம் என்ற தத்துவப் பாடல் இடம் பெற்றுள்ளது. அதை படமாக்குவதற்காக பல லட்ச ரூபாய் செலவில் ஒரு ஏக்கர் பரப்பில் மயான அரங்கம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். படப்பிடிப்பை நடத்தும் வேளையில் அதை நிஜ மயானம் என நினைத்து ஒரு பிணத்தை எடுத்து வந்து புதைக்க வந்தார்களாம் அந்த ஊர்க்காரர்கள்.
"அவர்களிடம் இது சினிமா செட் என்று சொல்லி அனுப்பி வைத்தோம். அவர்களிடம் புரிய வைத்து அனுப்பி வைக்க நாங்கள் பட்ட பாடு எங்களுக்குத்தான் தெரியும்," என்கிறார் இயக்குநர் இளையதேவன்.
ஞானக் கிறுக்கன் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாம்.
Post a Comment