எண்பது, தொன்னூறுகளில் வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர்களுக்கு உள்ள ஒரு மனநிலை... 'நம்மை விட சிறந்த காட்சியமைப்புகளை யாராலும் வைக்க முடியாது. ரசிகர்களுக்கு ரசிக்கத் தெரியவில்லை!' என்பதுதான்.
படத்தின் பிரஸ் ஷோவின் போதோ அல்லது சிறப்புக் காட்சியின் போதோ, 'சார், படம் கொஞ்சம் லெங்ந்தா இருக்கு.... அந்தப் பாட்டு, சண்டை காட்சிகளை குறைச்சிக்கலாமே.." என்று யாராவது சொன்னால், இயக்குநருக்கு அப்படி கோபம் வரும்.
படம் பார்க்கத் தெரியலய்யா உனக்கெல்லாம் என்று திட்டித் தீர்ப்பார்கள். படம் வெளியாகும். படத்தின் நீளத்தைப் பார்த்து, தியேட்டர் ஆபரேட்டரே ஜஸ்ட் லைக் தட் வெட்டியெறிந்துவிடுவார். இது நிதர்சனம். தியேட்டர் காத்தாடுவதை அறிந்து பின்னர் இயக்குநர் உட்கார்ந்து சில காட்சிகளைக் குறைத்து ட்ரிம் பண்ணுவார். அதற்குள் படம் பப்படமாகியிருக்கும்.
இந்தப் பட்டியலில் இப்போது சேர்ந்துள்ள படம் மூன்றுபேர் மூன்று காதல். படம் பார்த்த போதே பலரும் சொன்னது படத்தின் அநியாய நீளம். கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டி வந்தது.
இப்போது படத்தின் பாடல்கள் மற்றும் விமல் சம்பந்தப்பட்ட சில காட்சிகளையெல்லாம் தியேட்டர் ஆபரேட்டரே கத்தரித்துவிட, இயக்குநர் வசந்த் ஆற அமர சில காட்சிகளைத் தூக்கிவிட்டு, ட்ரிம் பண்ணிட்டேன்... இப்போ பாருங்க என்று அறிவித்துள்ளார்.
ஏற்கெனவே மணிரத்னத்தின் கடல் உள்ளிட்ட சில படங்கள், சேரனின் பொக்கிஷம், கமலின் சில படங்கள் நீளம் குறைக்கப்பட்டு வெளியாகி தோல்வியைத் தழுவியது நினைவிருக்கலாம்.
Post a Comment