உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்து வரும் இரண்டாவது படமான இது கதிர்வேலன் காதலி படத்தின் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன், திமுக பொருளாளர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
கடந்த ஆண்டு உலகமெங்கும் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் சுந்தரபாண்டியன். இந்தப் படத்தை முதல் முறையாக இயக்கி, எடுத்த எடுப்பிலேயே பெரிய இயக்குநர்கள் வரிசையில் சேர்ந்தவர் எஸ்ஆர் பிரபாகரன்.
அடுத்ததாக அவர் இயக்கும் படம்தான் 'இது கதிர்வேலன் காதலி'. உதயநிதி ஸ்டாலின் - நயன்தாரா - சந்தானம் நடிக்க பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. ரெட்ஜெயன்ட் மூவீஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்த நிலையில், திமுக பொருளாளர் முக ஸ்டாலினை சந்தித்தார் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன். ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்திய பிரபாகரன், அவரிடம் ஷூட்டிங் பற்றிய விவரங்களைச் சொன்னார்.
அவருக்கு தனது மணி விழா சிறப்பிதழை வழங்கிய ஸ்டாலின், படம் பெரிய வெற்றிப் பெற வாழ்த்தினார்.
Post a Comment