மோசடி வழக்கில் சிக்கி ஜெயிலுக்குப் போனதால் பவர் ஸ்டார் சீனிவாசன்நடித்த இரும்புக் கம்பி விளம்பத்தை டிவியில் ஒளிபரப்பாமல் நிறுத்தி வைத்துள்ளனர்.
சொந்த காசை செலவழித்து விளம்பரம் தேடிக் கொண்டவர் டாக்டர் சீனிவாசன். தனக்குத் தானே பவர்ஸ்டார் என்ற பட்டமும் கொடுத்துக் கொண்டார்.
கடன் வாங்கித் தருவதாக கமிசன் வாங்கிக் கொண்டு மோசடி செய்துவிட்டதாக இவர் மீது ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் ஓடியதால் அடுத்தடுத்து படங்கள் புக் ஆனது.
நமீதாவை வைத்து விளம்பரப்படம் எடுத்த இரும்புக் கம்பி நிறுவனம் ஒன்று பவர்ஸ்டாரையும் ஜோடியாக்கி விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. பில்டிங்கும் ஸ்ட்ராங், பேஸ்மட்டமும் ஸ்ட்ராங் என்று டயலாக் பேசினார் பவர் ஸ்டார் சீனிவாசன். அடுக்கடுக்காக மோசடிப் புகார் குவிந்து பவர்ஸ்டார் உள்ளே போகவே கடைசியில் விளம்பரத்தை டிவியில் ஒளிபரப்புவதை நிறுத்திவிட்டனர்.
தரமான கம்பி என்று விளம்பரப்படுத்தப்படும் அந்த விளம்பரத்தில் மோசடி நபர் சொன்னால் மக்கள் வாங்குவார்களா? என்று அந்த நிறுவனம் நினைத்ததே காரணம் என்று கூறப்படுகிறது.
Post a Comment