நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன்!

|

Kalabhavan Mani Gets Bail

சாலக்குடி: வன ஊழியரைத் தாக்கிய வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கலாபவன் மணிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

பிரபல மலையாள நடிகர் கலாபவன் மணி கடந்த 15-ந்தேதி கேரளாவில் உள்ள ஆதிரப்பள்ளி வனப்பகுதிக்கு நண்பர்களுடன் போய் வந்து கொண்டிருந்தபோது, வன ஊழியர்கள் இவரது காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.

இதற்கு கலாபவன் மணி எதிர்ப்பு தெரிவித்தார். இதில், கலாபவன் மணிக்கும், வன ஊழியர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது. வன ஊழியர் ரமேஷ் என்பவரை தாக்கியதில் அவர் மூக்குடைந்து ரத்தம் கொட்டியது.

இது குறித்து சாலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி கேரள உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பாக கலாபவன் மணி சாலக்குடி போலீசில் சரண் அடைந்து பின்னர் ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஜாமீன் பெற்றுக் கொள்ளும்படி அனுமதி வழங்கியது.

இதையடுத்து கலாபவன் மணி நேற்று பகல் 1.30 மணிக்கு சாலக்குடி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷாஜு முன்பு சரண் அடைந்தார்.

அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் பின்னர் அவரை போலீஸ் ஜீப்பில் ஏற்றி ஆதிரப்பள்ளி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

 

Post a Comment