வசதியான தொழிலதிபரைப் பிடித்த லட்சுமி ராய்!

|

Lakshmi Rai Marry An Industrialist

சென்னை: நடிகைகளுக்கே உரிய மரபுப்படி, ஒரு வசதியான தொழிலதிபரை தன் காதலில் வீழ்த்தியுள்ளார் லட்சுமிராய்.

இதை அவரே வெளிப்படையாக அறிவித்தும் உள்ளார்.

தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருபவர் லட்சுமிராய். சமீபத்தில் ஐபிஎல் சூதாட்டத்தில் இவரது பெயர் அடிபட்டது.

இது குறித்து லட்சுமிராயிடம் கேட்டால், "எனக்கேற்ற காதலனை நான் தேர்வு செய்துவிட்டேன். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நாங்கள் பழகி வருகிறோம். அவர் ஒரு தொழில் அதிபர். ஜாலியாக, நட்பு முறையில் பழகுபவர், நல்ல மனம் படைத்தவர். அவர் யார்? என்று கேட்கிறார்கள்.

தென்னிந்தியாவை சேர்ந்தவர். யார் என்பதை விரைவில் தெரிவிப்பேன். இவரை போன்ற ஒருவரைத்தான் வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டும் என்று எண்ணி இருந்தேன். நான் நடித்த சில படங்களை அவர் பார்த்திருக்கிறார். அவருக்கு பிடித்திருந்தது. ஆனால் அவர் சினிமா பைத்தியம் அல்ல.

எனது திருமணம் 2 ஆண்டு கழித்து நடக்கும். திருமணத்துக்கு பிறகு கணவருடன் தொழில் பார்ட்னர் ஆவேனா, தொடர்ந்து நடிப்பேனா என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.

சமீபகாலமாக கிரிக்கெட் வீரர்களுடன் என்னை தொடர்புபடுத்தி கேள்வி கேட்கிறார்கள். யாருடனும் எனக்கு இப்போது தொடர்பு இல்லை. சொல்லப் போனால் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு தரும் முக்கியத்துவத்தை நமது தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு தருவதில்லை என்பது வருத்தம் அளிக்கிறது," என்றார்.

ஐபிஎல் சூதாட்டத்தில் தன் பெயர் பலமாக அடிபடுவதை்த தவிர்க்க, எப்படியெல்லாம் பேச வேண்டியிருக்கிறது!

 

Post a Comment