ஜென்டில் மேன் ஆட்டம் என்று கூறப்படும் கிரிக்கெட்டில் நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும் போது இது ஜென்டில்மேன் விளையாட்டா என்று சந்தேகமளிக்கிறது என்று கவர்ச்சிப் புயல் வீணா மாலிக் கூறியுள்ளார்.
பாலிவுட் நாயகி வீணா மாலிக், சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய முகம்மது ஆசிப் உடன் காதலில் இருந்தவர். சூதாட்ட புகாரில் சிக்கிய போது ஆதரங்களுடன் வெளியிடத் தயார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர்.
இப்போது ஐ.பி.எல் 6 போட்டியில் சூதாட்ட சர்ச்சை கிளம்பியதை அடுத்து இது பற்றி கருத்து கூறியுள்ளார். கிரிக்கெட் சூதாட்டம் பற்றி செய்தியாளர்களிடம் வீணா மாலிக் கூறியதாவது,
வெளிநாடுகளில் சூதாட்டம் சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் கிரிக்கெட் சூதாட்டம் சட்டப்படி தவறு. பணத்திற்காக நடைபெறும் இதுபோன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது என்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்திய மீடியாக்களில் நுழைந்த வீணா மாலிக் பின்னர் பரபரப்பாக எதையாவது செய்து பிரபலமடைந்தார். 2010ம் ஆண்டு பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் சூதாட்ட புகார் சர்ச்சையில் சிக்கிய போது அந்த நேரத்தில் ஆசிப் உடன் இருந்தவர் வீணா மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment