விஜய் விலகிய அதே பகலவனில் ஜெயம் ரவி... சீமான் இயக்குகிறார்!

|

விஜய் நடிப்பதாக இருந்து திடீரென வெளியேறிய அதே பகலவன் படத்தில் இப்போது நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஜெயம் ரவி.

கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடிப்பதாக இருந்த படம் பகலவன். நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இயக்க இருந்த படம் இது.

இப் படத்திற்கான ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதுதான் சீமான் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையிலிருந்தபடியே படத்தின் திரைக்கதையை முழுமையாக முடித்துவிட்ட சீமான், வெளியில் வந்ததும் தனி அலுவலகம் எல்லாம் அமைத்து, அனைத்து படப்பிடிப்புக்கு தயாரான நிலையில், விஜய் விலகிவிட்டார்.

now jayam ravi joins with seeman pagalavan

அதன் பிறகு சீமான் இந்தப் படம் குறித்து யாரிடமும் பேசுவதைத் தவிர்த்து, கட்சிப் பணிகளில் மும்முரமானார்.

ஜீவா நடித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு முறை சீமான் கூறினார். ஜீவாவும் கதையைக் கேட்டார். ஆனால் பின்னர் நடிப்பதாகச் சொல்லிவிட்டார்.

இப்போது படத்தின் கதையைக் கேள்விப்பட்ட ஜெயம் ரவி, இந்தக் கதையில் நான் நடிக்கிறேன். முழுக் கதையையும் கூறுங்கள் என்று சீமானிடம் கேட்டிருக்கிறார்.

கோவையில் வைத்து 3 மணிநேரம் கதையைக் கேட்டுள்ளார். கதை சொல்லும் கலையில் சீமான் ஒரு நிபுணர். கிட்டத்தட்ட சினிமாவை நேரில் பார்ப்பது போலவே அவர் சொல்வார். நிச்சயம் நானே நடிக்கிறேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்கள் முடிந்ததும் அடுத்து ஷூட்டிங்கை ஆரம்பித்துவிடலாம் என்றாராம்.

சீமான் - ஜெயம் ரவி இணையும் 'பகலவன்' படத்தினைத் தயாரிக்கப் போவது கலைப்புலி தாணு தான். விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

'பூலோகம்', 'நிமிர்ந்து நில்' ஆகிய படங்களைத் தொடர்ந்து சீமான் இயக்கத்தில் நடித்துவிட்டுத்தான் அண்ணன் ராஜா இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனப் படத்தை நடிக்கப் போகிறாராம்.

பூலோகமும், நிமிர்ந்து நில்லும் கிட்டத்தட்ட படப்பிடிப்பின் இறுதிக் கட்டத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment