இரண்டு படங்கள் ஹிட்டானதும் சிவகார்த்திகேயன் ரேஞ்சும் கிர்ரென்று எகிறிவிட்டது.
இதுவரை புதுமுகம் அல்லது இரண்டாம் நிலை நாயகிகள்தான் அவருக்கு ஜோடியாக நடித்தனர். இப்போது முதல் முறையாக டாப் ஹீரோயினான ஹன்ஸிகாவுடன் டூயட் பாடவிருக்கிறார்.
இயக்குநர் ஏஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தில்தான் சிவகார்த்திகேயனும் ஹன்ஸிகாவும் ஜோடி சேருகிறார்கள்.
இந்தப் படத்தில் நடிப்பது குறித்து ஹன்சிகா கூறுகையில் ''இயக்குனர் முருகதாஸ் அவர்களின் தயாரிப்பில் நடிக்கவிருப்பதை பெருமையாகவும் கவுரவமாகவும் கருதுகிறேன்.
இப்படத்தின் கதை - திரைக்கதை முழுசாகக் கேட்டேன், படித்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டது... இது ஒரு முழு நீள காமெடி படம். இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவரது திறமையும் வளர்ச்சியும் எல்லோரையும் கவர்ந்துள்ளது. அவரது சமீபத்திய படங்களை நானும் ரசித்துப் பார்த்தேன். நாங்கள் இருவரும் இணையும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றி பெறும் என நம்புகிறேன்," என்றார்.
சிவகார்த்திகேயனைக் கேட்டால், "ரொம்ப சந்தோஷமா இருக்கு... ஹன்ஸிகாவுடன் டூயட் பாடும் நாளை நானும் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்," என்றார்.
Post a Comment