சென்னை: சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவின் உயரத்தை புகழும் வகையில் ஒரு வசனம் வைக்கப்பட்டுள்ளதாம்.
சிங்கம் படத்தில் சூர்யா சிங்கத்தை காட்டுல பார்த்திருப்ப, கூண்டுல பார்த்திருப்ப என்ற வசனத்தை பேசியிருப்பார். அந்த வசனத்தை சிங்கம் 2 படத்தில் அனுஷ்காவுக்கு ஏற்ற மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.
அனுஷ்கா ஆறடி உயர நாயகி என்பது அனைவரும் தெரிந்தது. அப்படி உயரமாகவும், கம்பீரமாகவும் இருக்கும் அந்த அரபிக் குதிரையை புகழும்படி பஞ்ச் டயலாக் வைத்துள்ளனர். படத்தில் சந்தானம் தான் அந்த வசனத்தை பேசுகிறார். அது என்ன வசனம் என்றால், "குதிரையை ஓடிப் பார்த்துருப்பே, ஆடிப் பார்த்திருப்பே, ஆனால் சுடிதாரில் பார்த்திருக்கியா? என்பது தான்.
தனக்காக எழுதப்பட்ட இந்த வசனத்தால் அனுஷ்கா சந்தோஷமாக இருந்தாலும் ஹன்சிகாவுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம் என்று பரவும் செய்தியால் கவலையில் உள்ளாராம்.
Post a Comment