நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்

|

நடிகர் நந்தாவுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த வித்யரூபாவுக்கும் நாளை கோவையில் திருமணம் நடக்கிறது.

மவுனம் பேசியதே, புன்னகைப் பூவே, கோடம்பாக்கம், உற்சாகம், வேலூர் மாவட்டம் உள்பட பல படங்களில் நடித்தவர் நந்தா.

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்

ஈழப் போர் பின்னணியில் இவர் நடித்த ஆணிவேர் பெரும் பாராட்டுகளைப் பெற்றது.

இப்போது புதிய திருப்பங்கள் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பனின் பேரன் இவர். நந்தாவுக்கும் திருச்செங்கோட்டைச் சேர்ந்த சதாசிவம் - சுசிலா தம்பதிகளின் மகள் வித்யரூபாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. நாளை கோவையில் இருவருக்கும் திருமணம் நடக்கிறது.

அரசியல் மற்றும் திரையுலகப் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ஜூலை 17-ம் தேதி கோவை கொடிசா அரங்கில் நந்தா - வித்யரூபா திருமண வரவேற்பு நடக்கிறது.

நடிகர் நந்தாவுக்கு நாளை கோவையில் திருமணம்
 

Post a Comment